இஸ்ரேலில் 27ஆவது வாரமாகத் தொடரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டம்

இஸ்ரேலில் 27ஆவது வாரமாக அரசாங்க எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

பிரதமர் பென்யமின் நெட்டான்யாஹூ  நாட்டின் நீதித்துறையை சீரமைக்க முயல்கிறார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்ரேல் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்துகின்றனர்.

கடந்த சில வாரங்களைவிட நேற்று அதிகமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர். அரசாங்கத்தின் முடிவுகளுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது புதிய மசோதா.

அதன் மீது இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நாளை (10 ஜூலை) வாக்கெடுப்பு நடக்கவிருக்கும் சூழலில் போராட்டம் தொடர்கிறது.

 

-sm