தலைமை நீதிபதியின் அலுவலகத்தில் தீர்ப்பை திருடிய நீதிபதி விவகாரம் குறித்து தாம் புகார் செய்ததாக கூறப்படுவதை மூத்த வழக்குரைஞர் கர்பால் சிங் மறுத்ததோடு அப்புகாரில் நற்கூறு ஏதும் இல்லை என்று அந்த அலுவலகம் இன்று எடுத்திருந்த முடிவு குறித்து வியப்படைவதாக கூறினார்.
“பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களிலிருந்து விசாரணை செய்யுமாறு நான் எந்த புகாரையும் தலைமை நீதிபதியிடம் (சிஜே) செய்யவில்லை என்பது தெளிவாகிறது.
“விசாரணை நடத்திய பின்னர், எனது புகாரில் எவ்வித அடிப்படையும் இல்லாததால், நீதிபதிகளின் நன்னெறிகள் தொகுப்பு 2009, செக்சன் 13(1) இன் கீழ் அப்புகார் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி கூறியிருப்பது என்னை வியப்படையச் செய்துள்ளது”, என்று அவர் இன்று பிற்பகல் ஓர் அறிக்கையில் கூறினார்.
நன்னெறிகள் தொகுப்பு 2009 இன் கீழ் விசாரணை நடத்தியதாக சிஜே கூறியிருந்தது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். நன்னெறி தொகுப்புக்கு முன்னரே தீர்ப்பு திருட்டு 2000 ஆம் ஆண்டில் நடந்தது. அத்தொகுப்பு பின்தேதியிட்ட காலத்திலிருந்து அமலாக்கம் கொண்டிருக்கவில்லை.”
சிஜே அலுவலகத்துடனான தம்முடைய கடிதத் தொடர்பு சிஜே அலுவலகம் தாம் இந்த விவகாரத்தில் அந்தத் தவறிழைத்த நீதிபதியுடன் வைத்திருந்த கடிதத் தொடர்பு குறித்து வினவப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தது மட்டுமே என்று கர்பால் விளக்கம் அளித்தார்.