ஸாக்காத் நிதியில் “மோசடி செய்ததற்காக” பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரும் மற்றும் இருவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிகேஆருடன் தொடர்புடைய அரசு சார்பற்ற (என்ஜிஒ) ஜிங்கா 13 இன்று அம்மூவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.
அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அந்த விவகாரம் அகோங்கிடம் கொண்டு செல்லப்படும் என்று அந்த என்ஜிஒவின் செயலாளர் சைபுடின் ஷபி முகமட் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
“நாங்கள் ஜமில் கிர் மற்றும் இதர இருவரையும் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையேல், நாங்கள் அந்த விவகாரத்தை நாட்டின் இஸ்லாமிய சமயத்தின் தலைவரான அகோங்கிடம் கொண்டு செல்வோம்”, என்றாரவர்.