அமெரிக்காவிலும் கனடாவிலும் அரிசி மூட்டைகளை வாங்க இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
சென்ற வியாழக்கிழமையன்று இந்தியாவில் தாமதமாகப் பெய்த பருவமழையால் பயிர்கள் கணிசமாகச் சேதமுற்றன.
உள்நாட்டில் ஒரே மாதத்தில் அரிசி சில்லறை விற்பனை விலை 3 விழுக்காடு உயர்ந்தது. இதன் எதிரொலியாகவே இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது என்று இந்திய அரசாங்கம் சொல்கிறது. உலக அளவில் 300 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அரிசி முக்கிய உணவு.
அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40% ஆகும். “இந்தியச் சந்தையில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும் உள்நாட்டுச் சந்தையில் விலை உயர்வைக் குறைக்கவும் இந்திய அரசாங்கம் ஏற்றுமதிக் கொள்கையில் திருத்தம் செய்துள்ளது,” என்று உணவு அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக உணவுச் சந்தையில் குறிப்பாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வட அமெரிக்க நாடுகளில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பல்பொருள் அங்காடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பாசுமதி அல்லாத பிற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்தது.
-sm