ஜப்பானின் மக்கள்தொகை இதுவரை இல்லாத அளவு சரிவு

சென்ற ஆண்டு ஜப்பானின் மக்கள்தொகை இதுவரை இல்லாத அளவு 0.65 விழுக்காடு சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக அந்நாட்டின் 47 வட்டாரங்களிலும் மக்கள்தொகை சரிந்திருப்பதாக ஜப்பானின் உள்துறை அமைச்சு நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

குறைவான குழந்தைப் பிறப்பு விகிதத்தால் அங்குத் தொடர்ந்து 14 ஆண்டுகளாக மக்கள்தொகை குறைந்து வருகிறது. இதற்கிடையே ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு 10.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அங்குக் கடுமையான குடிநுழைவுச் சட்டங்கள் நடப்பில் இருந்தாலும், ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக அதிகமான வெளிநாட்டினர் அனுமதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

குழந்தைகளின் எண்ணிக்கையும் மக்கள்தொகையும் குறைவது ஜப்பானின் சமுதாயம், பொருளியல், சமூக நலன் ஆகிய அனைத்தும் சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்சினை என்று அரசாங்க பேச்சாளர் தெரிவித்தார்.

பெண்களையும் முதியோரையும் ஊழியரணியில் சேரும்படி ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

 

 

-sm