ஸாக்காத் நிதியியை தாம் தவறாகப் பயன்படுத்தியாக கூறப்படும் புகாரையும் அவரது வீடு பற்றிய பிரச்னையையும் பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் கொடுமையானது என்று கருதுகிறார்.
ஓர் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு ஆய்வுகள் செய்திருக்க வேண்டும். இந்த அறிக்கையைப் பொறுப்பற்ற தரப்பினர் பெரிதுபடுத்துவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக அவர் கருதுகிறார்.
தங்களுடைய பலவீனங்கள் மீதான மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக எதிர்க்கட்சியினர் பாரிசான் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றி கூச்சல் போடுகின்றனர் என்று ஜமில் கூறினார்.
மூன்று பிரதிவாதிகளின் வழக்குகளுக்கான செலவுத்தொகை ஸாக்காத் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல என்றாரவர்.
அமைச்சராவதற்கு முன்பு வீடு வாங்கப்பட்டது
இந்த வழக்கின் மூன்று பிரதிவாதிகளுக்கான செலவுத் தொகையை எம்எஐடபுள்யுபி என்ற இஸ்லாமிய சமய மன்றம் கட்டியது.
“எம்எஐடபுள்யுபிக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இவ்வாண்டு ரிம700,000 ஒதுக்கப்பட்டது”, என்று அவர் மேலும் கூறினார்.
அவரது வீடு பற்றிய பிரச்னையில், அவர் வீட்டை 1994 ஆண்டில் அமைச்சராவதற்கு முன்பு வாங்கியதாகவும் அதற்கான கடனை இன்னும் கட்டிவருவதாகவும் ஜமில் கூறினார்.