உலக நாடுகளுக்குப் பெரிய தற்காப்புச் சவால் தரும் நாடு சீனாதான் – ஜப்பான்

சீனாதான் ஜப்பானுக்கும் உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய தற்காப்புச் சவால் என்று ஜப்பான் கூறுகிறது.

வருடாந்திரத் தற்காப்பு வெள்ளை அறிக்கையை அது வெளியிட்டது. கடந்த ஆண்டு ஜப்பான் அதன் புதிய தேசியப் பாதுகாப்புக் கொள்கையை முன்வைத்தது.

அதன் பிறகு வெளியிடப்படும் முதல் வெள்ளை அறிக்கை இது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட உளவு பலூன் தகராறு பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அது போன்ற பொருள் எதுவும் தன் ஆகாயத்தில் மிதந்து வந்தால் சுட்டுத்தள்ளப்படும் என்று அறிக்கை கூறியது.

ஜப்பான் உள்ளிட்ட ஆசியாவின் சில நாடுகளில் அந்தப் பலூன் போன்ற பொருள் தென்பட்டதாகக் கூறப்பட்டது. புதிய பாதுகாப்புக் கொள்கை கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.

பிரதமர் புமியோ கிஷிடா தற்காப்புச் செலவை ஐந்தாண்டில் இரண்டு மடங்காக்கப் போவதாகக் கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் மேற்கொள்ளும் மிகப்பெரிய ராணுவ விரிவாக்கமாக அது இருக்கும்.

 

 

-sm