ஐரோப்பாவில் பரவும் காட்டுத்தீ, பிரபல கடற்கரைப்குதி தீக்கிரையாகும் அபாயம்

ஐரோப்பாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பரவுகிறது. மிகவும் பிரபல கடற்கரைகளைக் கொண்ட பிரெஞ்சு ரிவியேரா வட்டாரம் தீக்கிரையாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

பிரான்சின் தெற்கில் இருக்கும் அந்த வட்டாரம் 30 ஜூலை நாளை முதல் அதிக ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்படும்.

இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் காட்டுத்தீ பற்றிய அச்சம் தொடர்கிறது. ஐரோப்பாவில் அடுத்த வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என்று முன்னுரைக்கப்படுகிறது.

கிரீஸ் ஆகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ தொடர்ந்து எரிகிறது.இந்த ஜூலை மாதம் நவீன மனித வரலாற்றில் ஆகவெப்பமான மாதமாகக் கருதப்படும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

 

-sm