பாகிஸ்தான் அரசியல் கட்சி கூட்டத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 44ஆக உயர்வு

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. மேலும் 80 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மனித குண்டு வெடிப்பு மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

 

-mm