பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் (30 ஜூலை) நடந்த தற்கொலைத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
அரசியல் கூட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 54 பேர் மாண்டனர். அரசாங்கத்துக்கு ஆதரவான குழு ஒன்று அந்தக் கூட்டத்தை நடத்தியது.
தற்கொலைத் தாக்குதலுக்குக் காரணமானோரை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. தாக்குதலை நடத்திய நபரை அடையாளம் காண்பதற்காக மரபணுச் சோதனை நடத்தப்படுவதாய் உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.
3 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
-sm