தேர்தலைத் தள்ளிவைத்த மியன்மார் ராணுவ அரசாங்கம்

மியன்மார் ராணுவ அரசாங்கம் தேர்தலை அதிகாரபூர்வமாகத் தள்ளிவைத்துள்ளது.

அவசர நிலை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் தேர்தல் இந்த மாதம் நடக்கும் என்று ராணுவத் தலைவர் மின் ஓங் லைன் கூறியிருந்தார்.

எனினும் வன்முறை ஓயவில்லை என்று கூறி, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் என்று கருதப்படுவோருக்கு எதிரான நடவடிக்கைகளில் ராணுவம் கவனம் செலுத்துவதாகக் கூறப்பட்டது.

அவசர நிலை ஏற்கனவே மூன்று மூறை நீட்டிக்கப்பட்டது.

 

 

-sm