சூடானின் உள்நாட்டுப் போர், 500 குழந்தைகள் பட்டினியால் இறந்தனர்

கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 316 குழந்தைகள் பட்டினியால் இறந்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் 5 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் சூடானின் ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பின் இயக்குநர் ஆரிப் நுவார் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், ராணுவத்துக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் மோதல் ஏற்பட்டது. சண்டை தீவிரமடைந்ததால், தலைநகர் கார்டூம் உள்ளிட்ட நகர்ப்புறங்கள் போர்க்களமாக மாறியது.

நாடு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

நாட்டின் சுகாதார வசதி முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும், நாட்டின் குழந்தைகள் சரியான உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுகின்றனர்.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 2,400 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடாரிப் மாகாணத்தில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் ஏப்ரல் முதல் ஜூலை வரை ஊட்டச்சத்து குறைபாட்டால் 132 குழந்தைகள் இறந்துள்ளனர்.

 

-ip