48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுங்கள், 4 நாட்டு தூதர்களுக்கு நைஜர் எச்சரிக்கை

அப்துரஹ்மானே சியானி தன்னைத்தானே புது அதிபராக அறிவித்துக் கொண்டார் நைஜர் ஜன்தாவை ஆட்சியாளர்களாகவே நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்கிறது பிரான்ஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜர். இதன் தலைநகர் நியாமே. இங்கு அதிபராக இருந்த மொகமெட் பசோம், ஜன்தா எனப்படும் ராணுவ குழு நடத்திய சிறு கிளர்ச்சியால் கடந்த ஜூலை 26 அன்று பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இவருக்கு பதிலாக கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி தன்னைத்தானே புது அதிபராக அறிவித்து கொண்டு ஆட்சியில் அமர்ந்தார்.

முன்னாள் அதிபரும் அவர் குடும்பத்தினரும் சிறை வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன. அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஜன்தா அமைப்பு 21 பேர்களை கொண்ட ஒரு புதிய அமைச்சரவையையும் அறிவித்துள்ளது.

 

-dt