ஹாங்காங்கில் சாவோலா சூறாவளி எதிரொலியாக, 450-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் பள்ளிகள் மூடப்பட்டன.
சீனாவின் நிர்வாக ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஹாங்காங் அமைந்துள்ளது. ஹாங்காங்கின் குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்டாங் கவுன்டி பகுதியில் இருந்து தைஷன் நகரை நோக்கி சாவோலோ சூறாவளி இன்று காலை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூறாவளியானது, தொடர்ந்து மத்திய குவாங்டாங் அருகே மேற்கு நோக்கி நகர்ந்து செல்ல கூடும் என சீன தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் சூழலும் காணப்படுகிறது.

ஹாங்காங்கில் பள்ளிகள் திறப்பும் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. பங்கு சந்தைகளின் வர்த்தகமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. சூறாவளி எதிரொலியாக, ரெயில் போக்குவரத்து சேவையும் அந்த பகுதியில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இன்று மாலை வரை இந்த மாகாணத்தில் ரெயில்கள் வருவதற்கோ அல்லது ரெயில்கள் புறப்பட்டு செல்வதற்கோ அனுமதிக்கப்படாது. இதனால், கடலோர பகுதிகளில் தீவிர வெள்ள பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இன்று மெல்ல சூறாவளி பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகமும் குறையும்.
-dt