சிங்கப்பூரின் 9ஆவது அதிபராகிறார் தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூரின் 9ஆவது அதிபராகத்  தர்மன் சண்முகரத்னம் அதிகாரபூர்மாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் 70.4 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாகத் தேர்தல் துறை அறிவித்தது. தாமான் ஜூரோங் உணவங்காடி நிலையத்தில் இருந்த திரு தர்மன், தமக்குக் கிடைத்த வலுவான ஆதரவைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.

தர்மன் தமக்கும் தமது கொள்கைகளுக்கும் கிடைத்துள்ள வாக்குகள், சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ள “நம்பிக்கை வாக்குகள்” என்று நம்புவதாகக் கூறியுள்ளார். அவை, ஒளிமயமான வருங்காலம் குறித்த சாதக மனப்பான்மையுள்ள வாக்குகள் என்றார் அவர்.

எதிர்காலத்தில் சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து முன்னேறி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கலாம் என்றும் தர்மன் கூறினார். சிங்கப்பூரர்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதைக் காப்பாற்றப்போவதாக அவர் உறுதிகூறினார்.

தர்மன் 2001ஆம் ஆண்டு முதல் ஜூரோங் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் .

 

-sm