கடலுணவு மீது சீனா விதித்துள்ள தடையை அறவே ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஜப்பான் உலக வர்த்தக நிறுவனத்திடம் புகார் கொடுத்துள்ளது.
ஜப்பான் புக்குஷிமா அணுவாலையின் கதிரியக்கக் கழிவுநீரைக் கடலில் கலக்கத் தொடங்கியபின் சீனா அந்தத் தடையை விதித்தது.
ஜப்பானிலிருந்து கடலுணவு தருவிப்பதை நிறுத்தவிருப்பதாகச் சீனா கடந்த மாதம் 31ஆம் தேதி உலக வர்த்தக நிறுவனத்திடம் தெரிவித்தது.
அதற்கு ஜப்பான், தன்னுடைய நிலைப்பாட்டை நிறுவனத்திடம் புரியவைக்கத் தயாராய் இருப்பதாக பதிலளித்தது. தடையை உடனடியாய் மீட்டுக்கொள்ளுமாறு ஜப்பானிய வெளியுறவு அமைச்சு பெய்ச்சிங்கை வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறு செய்யாவிட்டால் சீனா மீது உலக வர்த்தக நிறுவனத்திடம் புகார் அளிக்கவிருப்பதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதில் ஜப்பானுக்கு வாஷிங்டனின் ஆதரவு உண்டு என ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதர் கூறியிருந்தார்.
-sm