கேரளா கோழிக்கோட்டில் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழப்பு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த மரணத்துக்கு நிபா வைரஸ் காரணமாக என கேரள அரசு சந்தேகம் கொண்டுள்ளது.

ஏனெனில், உயிரிழந்தவர்களில் ஒருவரது உறவினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நடத்தியுள்ளார்.

நிபா வைரஸ், பழம்தின்னி வவ்வால்களில் இருந்து பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-ல் முதன் முதலில் கேரளாவில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதில் சுமார் 17 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2019 மற்றும் 2021-ல் நிபா வைரஸ் அச்சுறுத்தலை கேரளா எதிர்கொண்டது.

 

 

-th