ராஜா பெட்ராவின் நேர்காணல் நேற்று ஸ்டிரேய்ட்ஸ் டைம்ஸ் (NSD) நாளிதழில் வெளிடப்பட்டதைத் தொடர்ந்து மலேசியன் சிவில் லிபர்ட்டிஸ் மூவ்மெண்ட் (MCLM) தலைவர் ஹேரிஸ் இப்ராகிம் (Haris Ibrahim) அவ்வியக்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.
ஹேரிஸ் அவரது முடிவை இன்று அவரது வலைதளத்தில் பதிவு செய்தார். அந்த நேர்காணல் அவரது “சிரமமான முடிவிற்கான” காரணங்களில் ஒன்று என்று கூறினார்.
அந்த நேர்காணலில் ராஜா பெட்ரா எழுப்பியிருந்த பிரச்னைகள் தாம் இயக்கத்தின் நிலைப்பாடுகள் என்று அறிந்திருந்தவற்கு முரணாவை என்று ஹேரிஸ் இப்ராகிம் கூறினார்.
“இக்கருத்துகள்…அம்னோ/பின் தவிர எதுவானாலும் (ABU) நடவடிக்கையில் நான் மேற்கொண்டுள்ள முயற்சிகளை, அவை எம்எல்சிஎம் மூலாமாக செய்யப்பட்டபோதிலும், பெருமளவிற்கு பாதிக்கிறது.
“நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அம்னோ/பின் இன அடிப்படையிலான, பிரித்தாளும் (அரசியல்) கொள்கையின் பாதிப்புகளை அகற்ற சயா அனாக் பங்சா மலேசியா (SABM) மற்றும் பலர் தொடர்ந்து நாள்தோறும் நடவடிக்கைகளை எடுத்துவரும் வேளையில், எனது நண்பர் (ராஜா பெட்ரா) தொடர்ந்து நம்மை மலாயக்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் இதரர் என்று காண்கிறார்”, என்றார் ஹேரிஸ்.