ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவர உலகம் ஒன்றுபடவேண்டும் – ஸெலென்ஸ்கி

உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை  முடிவுக்குக் கொண்டுவர உலகம் ஒன்றுபடவேண்டும் என உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

தீமையை நம்பக்கூடாது என்று அவர் நியூயார்க்கில் ஐக்கிய நாட்டுப் பொதுச்சபைக் கூட்டத்தில் கூறினார். உலகை இறுதிப்போருக்கு இட்டுச்செல்வதிலிருந்து அணுவாயுதங்கள் கொண்ட ரஷ்யாவைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

உணவுப்பொருள் முதல் எரிசக்திவரை அனைத்தையும் ரஷ்யா ஆயுதமாக்குவதாக அவர் கூறினார். “ரஷ்யா உலகைப் போருக்குத் தள்ளுகிறது. பூசல் முடிவுக்கு வந்த பிறகு, யாரும் எந்த ஒரு தேசத்தையும் தாக்க முற்படமாட்டா என்பதை உறுதிசெய்ய உக்ரேன் எண்ணுகிறது,” என்று ஸெலென்ஸ்கி கூறினார்..

 

-sm