கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜாலில் தாம் பிரதமர் நஜிப்பிடம் பணித்துறப்பு கடிதம் கொடுத்துள்ளதாக கூறப்படுவதை மறுத்தார்.
அக்கூற்றை உதரித்தள்ளிய ஷாரிஸாட், “அது உண்மையல்ல. நான் எனது பணித்துறப்பு கடிதத்தைக் கொடுக்கவே இல்லை. அவை எல்லாம் வெறும் ஊகங்கள், அது எதிரணியினர் நடக்க வேண்டும் என்று விரும்புவதாகும்”, என்று கூறினார்.
“எனது நிலை குறித்து தீர்மானிக்க வேண்டியது முற்றிலும் பிரதமரைச் சார்ந்தது”, என்று அவர் இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.