உக்ரேனில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக நடந்துவரும் போர் மேலும் தீவிரமடையும் என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டாங்கிகளின் முதல் தொகுதி கீவைச் சென்றடைந்துள்ளது.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் அத்தகைய 31 டாங்கிகளைக் கீவுக்குக் கொடுக்க வாஷிங்டன் உத்தரவாதம் அளித்திருந்தது.
ரஷ்ய-டாங்கிகளை எதிர்ப்பதில் அவை உக்ரேனுக்குப் பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, உக்ரேனிய ராணுவம் கிரைமியாவில் உள்ள ரஷ்யத் தளபத்திய நிலையின் மீது, தான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் தளபதி ஒருவர் உட்பட 31 அதிகாரிகள் மாண்டதாகக் கூறுகிறது.
ஆனால் தாக்குதல் குறித்து ரஷ்யா வெளியிட்ட தகவலிலிருந்து அது மாறுபடுகிறது.
முதலில் ஒரே ஒரு சேவையாளர் மட்டும் மாண்டதாக மாஸ்கோ சொன்னது. பின்னர் அவர் கொல்லப்படவில்லை என்றும் மாறாக, அவரைக் காணவில்லை என்றும் தகவலைத் திருத்தி அது வெளியிட்டது.
-sm