சீனா, ரஷ்யாவை சேர்ந்த 16 நிறுவனங்கள் மீது தடைவிதித்த அமெரிக்கா

சீனாவையும் ரஷ்யாவையும் சேர்ந்த மேலும் 16 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

உக்ரேன்மீது படையெடுத்த ரஷ்யாவுக்கு அவை ஆயுதங்கள் வழங்கியதாக நம்பப்படுகிறது.

தடை விதிக்கப்பட்ட 9 நிறுவனங்கள் ஆளில்லா வானூர்திகளைத் தயாரிப்பதற்கான பாகங்களை ரஷ்ய ராணுவத்துக்குக் கொடுத்ததாக அமெரிக்க வர்த்தகத்துறை கூறியது. நிறுவனங்கள்மீது ஏற்கெனவே கடந்த மே மாதம் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது அவை வர்த்தகப் பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றன.

ஆளில்லா வானூர்திகளைச் செய்வதற்கான பாகங்களை வாங்க 6 சீன நிறுவனங்கள் ஈரானுக்கு உதவின என்று சொல்லப்படுகிறது.

மத்தியக் கிழக்கிலும் உக்ரேனிலும் தாக்குதல் நடத்த அவை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Abrams ரக கவச வாகனங்களை உக்ரேன் பெற்றுக்கொண்டது.

அதுபோன்று 31 கவச வாகனங்களை இவ்வாண்டின் தொடக்கத்தில் அனுப்பிவைக்க வாஷிங்டன் உறுதிகூறியிருந்தது.

 

-sm