நைஜீரியாவில் டிப்தீரியா எச்சரிக்கை: 20 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் தடுப்பூசி பெறவில்லை

நைஜீரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் டிப்தீரியா பரவி வருவதாக யுனிசெஃப் கூறுயுள்ளது, மேலும் சுமார் 22 மில்லியன் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்து இன்னும் கிடைக்கவில்லை.

நைஜீரியாவில் குழந்தைகளிடையே டிப்தீரியா நோய் முன்னெப்போதும் இல்லாத வகையில் பரவி வருவதாகவும், நாட்டில் சுமார் 22 மில்லியன் குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் சமீபத்திய உலக வரலாற்றில் மிக மோசமான டிப்தீரியா வெடிப்புக்கு மத்தியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசர தேவை என்று யுனிசெஃப் நேற்று எச்சரித்தது. தற்போதைய மதிப்பீட்டின்படி, 11,000 க்கும் அதிகமானோர் டிப்தீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இன்றுவரை, ஏழாயிரம் பேருக்கு தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் டிப்தீரியா நோயினால் இதுவரை 453 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். நான்கு முதல் பதினைந்து வயது வரையிலான இந்தக் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் எதுவும் போடப்படவில்லை.

தற்போது, யுனிசெஃப் நைஜீரிய அரசாங்கத்தின் சார்பாக நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளுக்கு தொண்ணூற்று மூன்று மில்லியன் டிப்தீரியா நோய்த்தடுப்பு மருந்துகளை விநியோகித்துள்ளது. இவற்றில் நாற்பது லட்சம் தொற்றுநோய் தொடங்கிய கானோவில் விநியோகிக்கப்பட்டது. வரும் வாரங்களில் மேலும் 40 லட்சம் டோஸ்கள் அரசுக்கு வழங்கப்படும் என யுனிசெப் அறிவித்துள்ளது.

 

-ip