மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்

ஆப்கனிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்; 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆப்கனிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெராத் நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் சனிக்கிழமை காலை 11 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் 5.5 ஆக பதிவான நிலையில், அடுத்தடுத்து 4.7, 6.3, 4.6 என நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. பல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக 15 பேர் உயிரிழந்தாகவும், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஹெராத் நகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள், கட்டிடங்களில் இருந்து வெளியே வந்தனர். நிலநடுக்கங்கள் காரணமாக சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

 

-ht