பிரான்ஸில் போராட்டங்களுக்கு தடை; மீறினால் நாடு கடத்தல்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தீவிரமடைந்துவரும் நிலையில்,  பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளதாகவும் , விதிகளை மீறும் வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் தடையை மீறி பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் பலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்; முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, போராட்டக்காரர்கள் இஸ்ரேல் கொலைகாரன் மற்றும் பலஸ்தீனம் வெல்லும் போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்த நிலையில் , பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயற்படுவதாகக் கூறி பலஸ்தீன ஆதரவு போராட்டங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

இருப்பினும் பலஸ்தீன ஆதரவு குழுக்கள் கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் அபாயம் காணப்படுவதாக கூறியுள்ளதுடன், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் பிரான்ஸ் மக்களை ஒற்றுமையாக இருக்குமாறும் சர்வதேச பிளவுகளுடன் தேசிய பிளவுகளை இணைக்க வேண்டாமெனவும் பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron அறிவித்துள்ளார்.

அதேவேளை இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் சுமார் 10 பிரான்ஸ் பிரஜைகள் கொல்லப்பட்டதுடன், பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 17 பிரான்ஸ் பிரஜைகள் காணாமல் போயுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

-jv