எல்லையில் பதற்றத்தைக் குறைக்க மியன்மார் ஒத்துழைக்கவேண்டும் – சீனா

சீன – மியன்மார் எல்லையில் நிலைத்தன்மையைக் கட்டிக்காக்க மியன்மார் ஒத்துழைக்க வேண்டுமென பெய்ச்சிங் வலியுறுத்தியுள்ளது.

மியன்மாரின் ராணுவ அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே எல்லையில் சண்டை கடுமையாகிவரும் நிலையில் அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சீன எல்லைப் பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பளிக்க நிலைத்தன்மை முக்கியம் என்றது பெய்ச்சிங்.

சீனாவின் அந்தக் கருத்துக்கு, மியன்மார் ராணுவ அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

நேற்று முன்தினம் மியன்மார் ராணுவம் பாய்ச்சிய பீரங்கிக்குண்டு, எல்லை தாண்டிச் சீனாவுக்குள் விழுந்ததில் சீனக் குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டார்.

 

 

-sm