பினாங்கு எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கான ஒதுக்கீடு அப்படியே உள்ளது – முதல்வர்

பினாங்கு அரசாங்கம் 2024 பட்ஜெட்டின் கீழ் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு ரிம 60,000 வருடாந்திர ஒதுக்கீட்டைத் தொடர்ந்து வழங்கும், இது இம்மாத மத்தியில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கப் பிரதிநிதிகள் வருடத்திற்கு 500,000 ரிங்கிட் பெறுவார்கள் என்று முதல்வர் சௌ கோன் இயோவ் கூறினார்.

ஜார்ஜ் டவுனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நாங்கள் முன்பு செய்ததைப் போலவே நாங்கள் தொடர்ந்து ஒதுக்கீடு செய்வோம்,” என்று அவர் கூறினார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படும் தொகையை அதிகரிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதா என்று கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், கூடுதல் ஒதுக்கீட்டிற்காக அரசாங்கத்துடன் விவாதிக்குமாறு கூட்டாட்சி மட்டத்தில் உள்ள எதிர்க்கட்சி பிரதிநிதிகளைக் கேட்ட பிரதமர் அன்வார் இப்ராஹிமின் ஆலோசனையை மாநில அரசு பின்பற்றுமா என்று கேட்டதற்கு, சோவ், மாநில அரசிடம் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை, என்றார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற ஒதுக்கீடுகளைப் பெற விரும்பினால், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அன்வார் முன்பு நினைவூட்டினார்.

பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோவ்

இதற்கிடையில், மற்றொரு வளர்ச்சியில், பினாங்கு Chinese Chambers of Commerce (PCCC) வாழ்நாள் கெளரவத் தலைவர் டான் கோக் பிங்கிற்கு எதிராகத் தான் தொடுத்த வழக்கு இரண்டு நபர்களுக்கு இடையேயான வழக்கு என்று சோ மீண்டும் வலியுறுத்தினார்.

PCCC உடனான மாநில அரசாங்கத்தின் உறவு மற்றும் ஒத்துழைப்பை ஏன் பாதிக்க வேண்டும்  என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று அவர் கூறினார்.

அக்டோபர் 19 அன்று, அவதூறான கருத்துக்களுக்காக, டானுக்கு எதிராகச் சோச்சட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டது.

டான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சோக்கூறியதாகக் கூறப்படுகிறது.