மலாயா கம்யூனிஸ்ட் கட்சி (CPM) தலைவர் ஓங் பூன் ஹுவாவுடன் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டிய சித்தி மஸ்துரா முஹம்மதுவுக்கு, DAP தேசியத் தலைவர் லிம் குவான் எங், அந்த பாஸ் எம்பி-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். .
கப்பாலா பத்தாஸ் எம்.பி.யாக இருக்கும் சித்தி மஸ்துராவுக்கு (மேலே, வலது) எதிராக குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வழக்கறிஞர் சங்கர நாராயணன் நாயரை நியமித்துள்ளதாக ஒரு அறிக்கையில் லிம் கூறினார்.
சித்தி மஸ்துராவின் “பொய்கள்” பற்றிய தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதின் யாசின் ஆகியோரையும் லிம் கேட்டுக்கொண்டார்.
“எனக்கெதிரான மூர்க்கத்தனமான பொய்கள் மற்றும் தீங்கிழைக்கும் அவதூறுகள் நிறைந்த சித்தி மஸ்துராவின் வெறுப்புப் பேச்சுக்காக அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க சங்கரை எனது வழக்கறிஞராக நியமித்துள்ளேன்.” என்று காட்டமான சாடினார் லிம்.