சிக்குன்குனியா நோய்க்கு எதிரான முதல் தடுப்பூசி

அமெரிக்க அரசாங்கம் சிக்குன்குனியா நோய்க்கு எதிரான தடுப்பூச்சிக்கு ஒப்புதல் தந்திருக்கிறது. கொசுக்களின் மூலம் பரவும் அந்த நோய்க்கு முதன்முறையாகத் தடுப்பூசி அறிமுகமாகியுள்ளது.

18 வயதை எட்டியவர்கள் ஒருமுறை அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். அந்தத் தடுப்பு மருந்தில் உயிரோடு உள்ள, பலவீனமான சிக்குன்குனியா கிருமி இருப்பதாக அமெரிக்க உணவு மருந்து ஆணையம் கூறியது.

அமெரிக்காவில் 3,500 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு அந்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது. சிக்குன்குனியா உலகச் சுகாதாரத்துக்கு மிகப்பெரிய மிரட்டலாக இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

கடந்த பதினைந்தாண்டில் குறைந்தது 5 மில்லியன் பேரை அந்த நோய் தாக்கியது.

 

-sm