அல்-ஷிபா மருத்துவமனையிலிருந்து தப்பியோடும் காஸா மக்கள்

இஸ்ரேலிய ராணுவம் அல்-ஷிபா மருத்துவமனையிலிருந்து அனைவரும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனையின் இயக்குநர் அந்தத் தகவலைத் தெரிவித்தார். மருத்துவமனையிலிருந்து நூற்றுக்கணக்கானோர் தப்பி ஓடுவதாகச் சம்பவ இடத்தில் இருக்கும் தனியார் செய்தி நிறுவனத்தின் நிருபர் கூறினார்.

காயமுற்ற 120 பேரும் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளும் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸ் குழுவின் நடவடிக்கை நிலையம் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. ஹமாஸ் அதை மறுத்துள்ளது.மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

 

 

-sm