மு. குலசேகரன் – மகாதீர் முகமது அன்மையில் அளித்த ஒரு பேட்டியில், இந்தியர்கள் தொடர்ந்து தங்களின் பண்பாட்டை பின்பற்றுவதால் அவர்களால் நாட்டுக்கு முழுமையான விசுவாசத்தை தர இயலாது என்று தன் வன்மத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.
நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன், யாரும் தன்னை மறந்திடிடக்கூடாது என்ற எண்ணத்தில் வழக்கம் போல் நான் இந்தியன் இல்லை , ஒரு முழு மாலாய்க்காரர் , இந்த நாட்டு இந்தியர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்றெல்லாம் ஒரு நேர்க்காணலில் உளறியுள்ளார்.
இந்த நாட்டின் சுதந்திரம் என்பது மூவினத்தின் முழு போராட்டத்தினாலும் ஒத்துழைப்பினாலும் பெறப்பட்ட ஒன்று என வரலாறு தெளிவாக இருக்கும் பட்சத்தில் மகாதீர் மட்டும் இந்த நாடு மலாய்க்காரகளுக்கே சொந்தம் என்று மீண்டும் மீண்டும் குப்பையை கிளப்பிவருகிறார்.
கம்யூனிஸ்டுக்களின் ஊடுருவல் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில் இந்தியர்கள் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தும் உடல் ஊனமுற்றும் தங்களின் தேசப்பற்றை காட்டியிருக்கின்றார்கள் என்பது வரலாறு. ஒரு அடையாளம்.
தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கும் தன் பிள்ளைகளின் மிதமிஞ்சிய செல்வதிற்கும் மடானி அரசாங்கத்தால் ஆபத்து வந்து விடுமோ என பயந்து இது போன்ற வன்மப் பேச்சு மூலம் தன்னை விசுவாசியாகவும் மாலாய்க்கார்களின் பாதுகாவலனாகவும் காட்டிக் கொள்ள முயல்கிறார் இந்த முதியவர்.
தன்னுடைய இந்த செய்தியால் மக்கள் தன்மீது பாய தயாராக இருக்கும் சட்டத்தின் பிடியிலிருந்து வரும் இரண்டொரு மாதங்களுக்காவது மக்கள் மனதை திசை திருப்பலாம் என்று எண்ணிக்கொண்டிருகின்றார்.
இதை நான் ஒரு தாழ்வு மனப்பன்மையின் எதிரொலியாகவும் ஒருவித அச்சத்தின் பிரதிபலிப்பாகவும் பார்க்கிறேன்.
அடி வாசலில் இருக்கும் சிங்கப்பூரின் அபரிவிதமான வளர்ச்சி எந்த வகையிலும் இனத்தை பொறுத்து அமையவில்லை என்பதை மகாதீர் தெரியாதது போல் நடிக்கிறார்.
இனங்களைப்பற்றிய விவாதங்களும் கலந்துரையாடல்களும் ஒற்றுமையை வளர்க்க ஊக்கமாக இருக்கவேண்டுமேயன்றி , இனத்துவேஷத்தை வித்திட ஒருபோதும் அவை இடங்கொடுக்கக்கூடாது.
பதவியில் இல்லாத போதெல்லாம் இன பாகுபாடு பற்றி பேசி வரும் இந்த கிழ நரி , இப்பொழுது சீனர்களை விட்டு விட்டு இந்தியர் பக்கம் தன் வியாக்கியானத்தை காட்டுகிறது.
தனி மொழி வளமையும் , கலாச்சராத்தையும் கொண்ட இந்தியர்கள், இந்த நாட்டின் மொழி , கலை ,கலாச்சார வளர்ச்சிக்கு நிரம்பவே பங்காற்றியுள்ளனர் என்பது யாவருக்கும் தெரிந்த விஷயம். இவர்கள் இன்னும் உள்நாட்டு மக்களுடன் முழுமையாக தங்களை இணைந்து உருமாற்றிக்கொள்ளவில்ல என குற்றம் சாட்டுவது மடத்தனம்.
இந்தியர்கள் இப்பொழுது உலகம் முழுவதும் கொடி கட்டிப்பரந்து கொண்டிருகின்றார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு இந்தியர்கள் தங்களை தாயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள். இங்கிலாந்தின் தற்போதயை பிரதமர் ஒரு இந்திய வம்சா வளியச் சேர்தந்தவர்.
தொழிழ்நுட்ப துறையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உயர் பதவிகளில் உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
கூகுள் நிறுவனத்தின் தலைவர் ஒரு தமிழர். இவர்கள் எல்லோரும் தங்களின் மொழியையும் காலச்சாரத்தையும் உடன் வைத்திருப்பவர்கள். இதனால் இவர்களை அந்த நாட்டுபற்று இல்லாதவர்கள் என்று கூற முடியுமா?
தன் வேரை மறந்து , தன் சுயநலதிற்காக தான் ஒரு சுத்த மாலய்க்கார்ர் என்று வாதிடும் இதே மகாதீர் அண்மையில் மலேசிய இந்திய முஸ்லீம்கள் அமைப்பு ஒன்றில் விருந்தினராக சென்ற பொழுது தான் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன் என்பதை பகிரங்கமாகே ஒப்புக்கொண்டது இங்கு நினைவுகூறத்தக்கது.
சுய விளம்பரத்திற்காகவும் , மக்களிடையே சலசலப்பை உண்டாக்கும் என்ற தீய நோக்கிலேயே மாகதீர் இந்த நேர்க்காணலை வழங்கியிருப்பதால் இச்செய்தியை குப்பை என்று மலேசியர்கள் ஒதுக்கி விட வேண்டும்.
மாகதீர் உண்மையான நேர்மையான அரசியல் வாதி என்பதை காட்ட முற்பட வேண்டும்
மு.குலசேகரன்- சட்டத்துறை துணை அமைச்சர்