ஜனவரி 9 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் அம்பாங் பகுதிக்குள் போலிஸ் ரோந்து காரில் 17 வயது சிறுமிக்கு எதிராக அக்குற்றங்களைச் செய்ததாக முஹம்மது ஃபஸ்ருல் ரஸ்ஸி இன்று மதியம் அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
லான்ஸ் கார்போரல் பதவியில் உள்ள அந்த 31 வயது நபர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376(1) மற்றும் 377CA ஆகியவற்றின் கீழ் இரண்டு கற்பழிப்பு வழக்குகள் மற்றும் அந்த சட்டத்தின் பிரிவு 377C இன் கீழ் இயற்கையின் ஒழுங்குக்கு எதிராக உடலுறவு கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. .
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் 14(A) பிரிவின்படி, வயதுக்குட்பட்ட பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிரிவு 376(1) இன் கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். பிரிவு 377CA இன் கீழ், ஃபஸ்ருல் 30 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் மற்றும் பிசவுக்கால் அடிக்கப்படலாம்.
377சி பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
குற்றம் சாட்டபப்ட்ட, அந்த ஒரு குழந்தைக்கு தந்தையான அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரிவு 14(A) க்கு எதிராக பிரம்படியும் சவுக்கடியும் விதிக்கப்படும்.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நர்ஷிலா கமருடின், ஃபஸ்ருலை ரிங்கிட் 20,000 ஜாமீனில் விடுவிக்க அனுமதித்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பேச வேண்டாம் என்று உத்தரவிட்டார்.
மிரட்டி பணம் பறித்தல்
அதோடு அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ஃபஸ்ருல் மற்றும் மற்றொரு போலீஸ் அதிகாரி அடிப் அய்கல் ஷாருல் நிஜாம், 24, இருவரும் 17 வயதுடைய பெண்ணின் காதலனை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்.
காவல்துறைக்கு பணம் கொடுக்காவிட்டால், தம்பதியினர் முத்தமிடும் வீடியோவைப் பரப்பிவிடுவதாக அந்த பையனை மிரட்டியதாக இருவரும் குற்றம் சாட்டப்பட்டனர்.