அரசாங்கத்திடம் சட்டச் சீர்திருத்தங்களைக் கோரி பெர்சே இந்தச் செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லும்.
சமூக ஊடகத்தில் ஒரு பதிவில், பெர்சே இந்த ஆர்ப்பாட்டம் அவர்களின் #Reformasi100Peratus பிரச்சாரத்தின் முதல் நடவடிக்கை என்று கூறியது.
பிரச்சாரத்தில் பெர்சேயின் முந்தைய இடுகைகள் அரசாங்கத்திற்கு “நினைவூட்ட” விரும்பிய மூன்று சீர்திருத்தங்களை எடுத்துக்காட்டுகின்றன.
முதலாவதாக, விசில்ப்ளோயர் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் அரசாங்கத் தகவல்களைப் பெறுவதற்கான திறந்த அணுகல்.
இரண்டாவது பிரதம மந்திரி பதவிக்கான கால வரம்பு, இது PH இன் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாகும்.
மூன்றாவது, தேசத்துரோகச் சட்டம் தொடர்பானது, PH இன் தேர்தல் வாக்குறுதிக்கு இணங்க, ஒடுக்குமுறையாகக் கருதப்படும் சட்டங்களைத் திருத்தவும் ரத்து செய்யவும்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அறிகைகளை தெரிவுசெய்து இணைப்பதற்கு அரசாங்கம் முன்னர் ஒரு குழுவை நிறுவியிருந்தது.
எவ்வாறாயினும், குழுவின் முடிவுகள் இதுவரை பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை.
‘கருப்பு அல்லது மஞ்சள் அணியுங்கள்’
இன்று தனது பதிவில், செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தேசிய நினைவுச்சின்னப் பிளாசாவில் (பிளாசா துகு நெகாரா) கருப்பு அல்லது மஞ்சள் அணிந்து தங்களுடன் சேருமாறு பெர்சே பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது.
சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுக்கும் குறிப்பாணையை கையளிப்பதற்காக நாடாளுமன்றத்திற்கு அணிவகுத்துச் செல்லக் குழு திட்டமிட்டுள்ளதாகப் பெர்சே துணைத் தலைவர் வோங் யான் கே உறுதிப்படுத்தினார்.
நாடாளுமன்றம் இந்த ஆண்டு திங்கட்கிழமை முதல் முறையாகக் கூடுகிறது, அங்குப் புதிய யாங் டி-பெர்டுவான் அகோங் அரச உரையை வழங்குவார்.