ஈரான் தனது எண்ணெயை நகர்த்துவதற்கு மலேசிய சேவை வழங்குநர்களைப் பயன்படுத்துகிறது என்ற அமெரிக்காவின் கவலைகளுக்கு மத்தியில், பிரதமர் அன்வார் இப்ராஹிம், மலேசியாவில் ஈரானிய எண்ணெய் பரிமாற்றத்திற்கு “ஒரு சிறிய ஆதாரமும் இல்லை” என்றார்.
அமெரிக்க கருவூலத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஈரான் தனது எண்ணெயைக் கொண்டு செல்லும் திறனுக்காக மலேசியாவில் உள்ள நிறுவனங்களை நம்பியிருப்பதை அமெரிக்கா கண்டதாக கடந்த வாரம் தெரிவித்தார்.
பாலஸ்தீனிய பிரிவினைவாதக் குழுவான ஹமாஸ் நிதி திரட்டி பின்னர் பணத்தை நகர்த்தக்கூடிய அதிகார வரம்பாக மலேசியா மாறுவதைத் தடுக்க அமெரிக்கா முயற்சிப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
கத்தாரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பேசிய அன்வார், சர்வதேச கடற்பகுதியில் கப்பலில் இருந்து கப்பலுக்கு பரிமாற்றங்களைக் கண்காணிக்கும் திறன் மலேசியாவுக்கு இல்லை என்றார்.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மலேசியா நீண்ட காலமாக பாலஸ்தீன பிரச்சினைக்காக குரல் கொடுத்து வந்ததுடன், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதலுக்கு இரு நாடுகளின் தீர்வுக்காக வாதிடுகிறது.
அன்வார் தனது கத்தார் பயணத்தின் போது ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை சந்தித்தார்.
ஹமாஸின் அரசியல் பிரிவுடன் தான் நல்லுறவைப் பேணி வரும் நிலையில், அதன் இராணுவ நடவடிக்கைகளில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அன்வார் கூறினார்.
“எனக்கு இராணுவக் குழுவுடன் (ஹமாஸ்) எந்த தொடர்பும் அல்லது விவாதமும் இல்லை,” என்று அவர் கூட்டத்தில் கூறினார்.
-fmt