ஏமாற்றமளிக்கும் மலேசியாவின் ஒலிம்பிக்ஸ் உடைகள் பன்முகத்தன்மை அற்றது என்ற பலத்த விமர்சனம் எழுந்ததுள்ளது.
ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கான மலேசியக் குழுவின் ஆடை பன்முகத்தன்மை இல்லாததால் பின்னடைவைச் சந்தித்தது.
இந்த உடை, பார்வையை ஈர்க்கும் வகையில் இருந்தாலும், மலேசியாவின் செழுமையான பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை என்று விமர்சகர்கள் வாதிட்டனர்.
மலேசியாகினியிடம் பேசிய முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துணை அமைச்சர் வான் அகமது பைசல் வான் அகமது கமால், உடை அழகாக இருந்தாலும், அதில்ஒலிம்பிக் பிரமாண்டம் இல்லை என்றார்.
“உடை அழகாக இருக்கிறது ஆனால் ஒலிம்பிக் சூழலை வெளிப்படுத்தவில்லை. இது ஹரி ராய உடை போலுள்ளது”.
“பொதுமக்களின் விமர்சனத்தையும் நாம் பார்க்க வேண்டும்”.
“இனங்களின் பன்முகத்தன்மையின் செழுமையையும் சபா மற்றும் சரவாக் பண்பாட்டு பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்கிய வடிவமைப்பு தோல்வியுற்றது,” என்று அவர் கூறினார்.
வடிவமைப்பாளரை தான் விமர்சிக்கவில்லை என்று வான் பைசால் வலியுறுத்தினார்,
வான் அகமாட் பைசால்
“நல்ல முயற்சி, ஆனால் நான் அதை அதிகம் கண்டிக்க விரும்பவில்லை. இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும், ”என்று அவர் மேலும் கூறினார்.
நேற்று, மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் மலேசிய விளையாட்டு வீரர்களுக்கான தொடக்க விழா ஆடையை வெளியிட்டது, உள்ளூர் பேஷன் ஹவுஸ் ரிஸ்மான் ருசைனி வடிவமைத்திருந்தார்.
மலேசியாவின் செழுமையான பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்றதாகக் கூறினாலும், இந்த உடையில் பாரம்பரிய மலாய் உடைகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன: அவை ஆலிவ் பச்சைப் நிற பாஜு குருங் மற்றும் பாஜு மெலாயு தெலுக் பெலாங்காவாகும்.