தென் ஆப்ரிக்கா அதிபர் ஜேக்கப் ஜூமாவின் அழைப்பின்பேரில் இரண்டு நாள் வருகை மேற்கொண்டு மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தென் ஆப்பிரிக்காவுக்கு இன்று புறப்பட்டார்.
நஜிப்புடன் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூரும் செல்கிறார். அவர்கள் கேல் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் மணி 3.00 புறப்படனர்.
முதன்முறையாக தென் ஆப்ரிக்காவுக்கு செல்லும் பிரதமர் நஜிப் அந்நாட்டின் வரலாற்று புகழ் பெற்ற ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ்சின் 100 ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தென்ஆப்ரிக்காவின் பல்லின மக்களையும் பல்வேறு சித்தாங்களையும் உள்ளடக்கிய ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் (எஎன்சி) தென் ஆப்ரிக்க வெள்ளையர்களின் இனவாதத்தை கடுமையாக எதிர்த்து போராடி ஆட்சியை 1994 ஆண்டில் பிடித்தது.
தமது வாழ்க்கையில் 27 ஆண்டுகளை சிறையில் கழித்த எஎன்சியின் தலைவர் நெல்சன் மண்டேலா தென் ஆப்ரிக்காவின் முதல் வெள்ளையரல்லாத அதிபரானார்.