அன்வார்:தீர்ப்பு எதிர்பாராதது, ஆனாலும் நீதித்துறை குறைபாடுடையதுதான்

குதப்புணர்ச்சி வழக்கில் விடுவிக்கப்பட்டதை ஓர் “இன்ப அதிர்ச்சி” என்று வருணித்த அன்வார் இப்ராகிம், ஆனாலும் நீதித்துறை அடிப்படையில் குறைபாடு கொண்டதுதான் என்று கூறினார்.

தீர்ப்பு கூறப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், தொடக்கக்கட்டத்தில் நீதிபதி முகம்மட் சபிடின் முகம்மட் டியா, வாதியான சைபுல் புகாரி அஸ்லானை ஓர் உண்மையான சாட்சி என்று குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார்.

அரசுத்தரப்பு மருத்துவர்களும் மற்ற நிபுணர்களும் அளித்த சாட்சியங்களை  முறியடிக்க தம்தரப்பு வெளிநாட்டு  நிபுணர்களை அழைத்துவர வேண்டியதாயிற்று என்றவர் விளக்கினார்.

“என்மீதான குற்றச்சாட்டை எந்த வகையிலும் அவர்களால் நிரூபித்திருக்க முடியாது. அதைத்தான் (நீதிபதியின்) தீர்ப்பு கூறுகிறது”, என்றார் அன்வார்.

அவரது விடுதலை நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதைக் காண்பிக்கிறதா என்று வினவியதற்கு, “இந்த வழக்கில் நீதிபதி சுதந்திரமாக செயல்பட சிறிது இடமளிக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்த அமைப்பு அடிப்படையில் குறைபாடு கொண்டது என்பதுதான் உண்மை”, என்றார்.
 
அல் ஜசீராவின் செய்தி அறிக்கை, நீதிபதி “சிறிது துணிச்சலை”க் காண்பித்துள்ளார் என்று அன்வார் குறிப்பிட்டதாக கூறியது.

குதப்புணர்ச்சி வழக்கு முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது என்றாலும் தொல்லை இன்னும் முற்றாக தீரவில்லை என்றே அன்வாரின் மனைவி டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயில் நினைக்கிறார். செக்ஸ் வீடியோ விவகாரத்தை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், மூவரும் எளிய தண்டனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

செக்ஸ் வீடியோ விவகாரத்தைக் கொண்டுவந்தவர்கள்  ‘டத்தோ டி’மூவர்’ என்ற கும்பலைச் சேர்ந்த ஷாஸ்ரில் எஸ்கே அப்துல்லா, ரகிம் தம்பி சிக்,ஷியிப் லாசிம் ஆகியோராவர். அந்த வீடியோ அன்வாரின் செக்ஸ் லீலைகளைக் காண்பிப்பதாகக் கூறப்படுகிறது.

அம்மூவர்மீதும் ஆபாசபடத்தைத் திரையிட்டுக் காண்பித்த தாகக் குற்றம் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடையே உரையாற்றிய அன்வார், அவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“அன்வார் விடுதலை” இயக்கத்தில் கலந்துகொண்டிருந்த அவர்களை நோக்கி “இப்போது மக்களின் விடுதலைக்காக நாம் ஒன்றுபட்டிருக்கிறோம்”, என்றவர் முழக்கமிட்டார்.