“901 வரைவு”: மூவர் விசாரணை கோரினர்

மூன்று தனிநபர்கள், சுவர் ஒன்றில் சாயத்தை தெளித்ததின் மூலம் பொதுச் சொத்துக்களுக்குச் சேதத்தை விளைவித்ததாகக் கூறும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியிருக்கின்றனர்.

30 வயதான நிருபர் சிடிக்கின் ஒமார், 27 வயதான வரைகலை ஒவியர் முகமட் பிக்ட்ரி அல் ஹலிமி அப்துல் ரானி என்ற அப்துல் கனி, இசைக்கலைஞரான 28 வயது அகமட் ஹுஸ்னி முகமட் அலி ஆகிய மூவர் மீது ஜனவரி மாதம் 7ம் தேதி காலை மணி 6.30 அளவில் அந்தக் குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.

அங்காசாபுரிக்கு எதிரில் உள்ள கேடிஎம் கம்யூட்டர் ரயில் நிலையத்தின் சுவரில் ‘TTR 901 Turun Tibai Rosmah’ என்னும் வாசகத்தை சாயத்தை தெளிப்பதின் மூலம் வரைந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சிறிய குற்றங்கள் சட்டத்தின் 15(2) பிரிவின் கீழும் குற்றவியல் சட்டத்தின் 34வது பிரிவின் கீழும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஒராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.