வீடற்ற ஒருவருக்கு KFC கோழி எலும்புகளை மூன்று பிரபலம் மிக்கவர்கள் வழங்குவதைக் காட்டும் வைரலான வீடியோகுறித்து MCMC விசாரணையைத் தொடங்கியுள்ளது – இது சுரண்டல் மற்றும் மிகவும் நெறிமுறையற்ற செயலாகும் என்று அது கண்டனம் செய்தது.
“ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை மலிவான கேளிக்கைக்காக, இணைய புகழுக்காக அல்லது பொது தூண்டுதலுக்காகப் பயன்படுத்துவது அல்லது பரப்பும் எந்த முயற்சியையும் எம்.சி.சி.எம் (MCMC) தீவிரமாகக் கவனிக்கிறது,” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
ஒரு நபரின் கண்ணியத்தை அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் உள்ளடக்கம் அடிப்படை நெறிமுறைகளை மீறுவது மட்டுமல்லாமல், சமூகத்தில் மனிதாபிமானமற்ற நடத்தையை இயல்பாக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என்று ஆணையம் எச்சரித்தது.
இந்த வழக்கு தற்போதுள்ள சட்ட விதிகளின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது உறுதிப்படுத்தியது.
சம்பந்தப்பட்ட பிபலமானவர்களில் ஒருவர் மன்னிப்பு கேட்டுள்ளார், அந்த வீடியோ அந்த நபரின் சம்மதத்துடன் படமாக்கப்பட்டது என்றும் “தொண்டு” பணிகளை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது என்றும் கூறினார்.

























