அன்வார்: அவர்கள் மேல் முறையீடு செய்கின்றார்களா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை

தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து தாம் விடுவிக்கப்பட்டது மீது அரசு தரப்பு மேல் முறையீடு செய்து கொள்கிறதா இல்லையா என்பது பற்றி எதிர்த்தரப்புத் தலைவர்  அன்வார் இப்ராஹிம் கவலைப்படவில்லை.

“அது (முறையீடு) என் வேலை அல்ல. என்றாலும் அதற்குச் சட்டத்திலும் அரசமைப்பிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை நான் அறிவேன்.”

“சட்டத்துறைத் தலைவர் முறையீடு செய்தால் தலையீடு ஏதும் இருக்காது என நான் நம்புகிறேன்,” என இப்போது தான் இந்தியா, துருக்கிப் பயணங்களை முடித்துக் கொண்டு திரும்பிய அவர் சொன்னார்.

கோலாலம்பூரில் உள்ள கம்போங் பாரு பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமைத் தொழுகையில் கலந்து கொண்ட வரை நூற்றுக்கணக்கான மக்கள் வரவேற்றனர்.

அரசு தரப்பு வழங்கிய மரபணு சாட்சியத்தை ஏற்றுக் கொள்ள முடியாததால் தாம் அன்வாரை விடுவிப்பதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா கூறினார்.

மேல் முறையீடு செய்வதற்குத் தாம் பரிந்துரைக்கப் போவதாக அந்த வழக்கில் அரசு தரப்புக்குத் தலைமை தாங்கிய சொலிஸிட்டர் ஜெனரல் II முகமட் யூசோப் ஜைனல் அபிடின் கூறியுள்ளார்.
/