கிளாந்தான் மருத்துவமனை விடுதியில் பயிற்சி பெண் மருத்துவர் சடலம் மீட்பு

கிளாந்தான், குவாலா கிராயில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனை விடுதியில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவரின் சலலம்  நேற்று  கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும், காலை சுமார் 9.55 மணியளவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதாக குவாலா கிராய் காவல்துறைத் தலைவர் மஸ்லான் மாமத் தெரிவித்தார்.

“சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் 29 வயதுடைய பயிற்சி பெண் மருத்துவர் என்பது தெரியவந்தது. அவர் விடுதி அறையின் குளியலறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குற்றச் செயல்கள் நடந்ததற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை, என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இவ்வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 09-9666222 என்ற எண்ணில் குவாலா கிராய் காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

 

 

 

-fmt