மாணவனின் தாய் காவல் நிலையத்தில் புகாரளித்ததை அடுத்து, 54 வயதுடைய அந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
54 வயதான அந்த ஆசிரியர் இன்று முதல் மூன்று நாட்களுக்குக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பாசிர் மாஸ் காவல் துறைத் தலைவர் மஸ்லான் ஹாசன் தெரிவித்தார்.
பாசிர் மாஸ், கிளந்தானில் (Pasir Mas, Kelantan) 14 வயது மாணவனைத் தாக்கியதாகவும், அம்மாணவனின் தாயாரை அறைந்ததாகவும் சந்தேகிக்கப்படும் ஆசிரியர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
பாசிர் மாஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் மஸ்லான் ஹாசன் (Mazlan Hassan) கூறுகையில், அம்மாணவனின் 42 வயது தாயார் அளித்த புகாரின் பேரில், நேற்று 54 வயதான அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
மாணவன் தொடர்பான சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு இடைநிலைப் பள்ளியில் நடந்ததாகவும், அவரது தாயார் தொடர்பான சம்பவம் நேற்று நடந்ததாகவும் அவர் கூறினார்.
“நேற்று, அம்மாணவனின் தாயார் தன் மகனுக்கு நடந்த சம்பவம் குறித்துப் பேசுவதற்காக அந்த ஆசிரியரைச் சந்தித்தார். அப்போது அந்த ஆசிரியர் அவரைச் பளீரென அறைந்ததாகக் கூறப்படுகிறது”.
புகார் அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உதவும் வகையில் இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குத் தடுப்புக் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார்,” என்று பெர்னாமா (Bernama) செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.
மஸ்லான் கூறுகையில், இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவு ஆபத்தான ஆயுதங்கள் அல்லது ஆபத்தான வழிமுறைகளைப் பயன்படுத்தி, வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல் தொடர்பானதாகும்.
























