PRISMAnita பெண்கள் உதவி தேவைப்படும் போது அதிகாரப்பூர்வ சிக்கல்கள் காரணமாக தடைப்படாமல் இருக்க “தவறான கதவு இல்லை” (No Wrong Door) என்ற கொள்கையின் கீழ் பல்வேறு ஆதரவு சேவைகளை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியதாவது, PRISMAnita திட்டம் பெண்களுக்கு விரைவான, ஒருங்கிணைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட ஆதரவு சேவைகளை பெறச் செய்வதை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
வீட்டு வன்முறை உட்பட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக, பிரிஸ்அனிதா(PRISMAnita) என்ற ஒரு மையத்தை பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று திறந்து வைத்தார்.
உதவி தேவைப்படும் பெண்கள் அதிகாரத்துவத் தடைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, “தவறான கதவு இல்லை” என்ற கொள்கையைப் பயன்படுத்தி, இந்த மையம் பல்வேறு ஆதரவு சேவைகளை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கும்.
நாடு முழுவதும் உள்ள மாநில மகளிர் மேம்பாட்டு அலுவலகங்களில் இதன் சேவைகள் கிடைக்கும்.
பெண்கள் விரைவான, ஒருங்கிணைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட ஆதரவு சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டதாக இந்த முயற்சி இருப்பதாக அன்வார் கூறினார்.
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களுடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்த மையம், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவற்றுக்கு எதிரான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில், நெருக்கடிகளில் உள்ள பெண்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு ஆலோசனை மையமாகச் செயல்படும் என்றார்.
“வழங்கப்படும் ஆதரவானது ஆலோசனைகளையும், அதோடு பங்குதாரர்களுடன் இணைந்து வழக்குகளை ஒருங்கிணைப்பதையும் உள்ளடக்கியுள்ளதால், இது மிகவும் முழுமையானதாக (Holistic) இருக்கிறது,” என்று அவர் தனது உரையில் கூறினார்.
பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு அரசாங்க அமைச்சகமும் துறையும் இந்த மையத்தை ஆதரிப்பதை உறுதி செய்வதாக அன்வார் கூறினார்.
“இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு (Lindung Kasih) பங்களிப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.”
“இல்லத்தரசிகளுக்கு ஏற்படும் நோய்கள், விபத்துகள் மற்றும் நிரந்தர ஊனம் அல்லது இயலாமையை ஏற்படுத்தக்கூடிய எதிர்பாராத சூழ்நிலைகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டத்தின் கீழ், இல்லத்தரசிகளுக்காக மூன்றாம் தரப்பினர் பங்களிப்புகளை வழங்க முடியும்.
நிறுவனங்கள் இத்திட்டத்திற்குப் பங்களிப்பதற்கான இந்தப் புதிய வழிமுறை, தேசிய நல வாரியத்தால் (National Welfare Foundation) நிர்வகிக்கப்படும் என்று அன்வார் கூறினார்.”
























