மூவார் உயர் நீதிமன்றம், அந்த அரபு மொழி ஆசிரியருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நான்கு பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தது.
மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் வரை, அஹ்னாஃப் அஃபிக் ஷைருல் பஸ்ரிக்கு (Ahnaf Afiq Shairul Bazri) விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க மூவார் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி நூலகத்தில் வைத்து எட்டு வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் வழக்கில், அரபு மொழி ஆசிரியரை விடுவித்த கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை முவார் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக அரசுத் தரப்பு செய்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ். கல்யாண குமார், 35 வயதான அஹ்னாப் அபிக் ஷைருல் பஸ்ரிக்கு (Ahnaf Afiq Shairul Bazri) ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நான்கு பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், தண்டனைக்காலத்தில் அவர் சிறையில் ஆலோசனை (counselling) பெற வேண்டும் என்றும், தண்டனை முடிந்த பிறகு அவர் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
திருமணமான அஹ்னாஃப் என்பவருக்கு மேல்முறையீடு முடியும் வரை தண்டனையை நிறுத்திவைக்க (stay of execution) நீதிபதி கல்யாணா அனுமதி வழங்கியதாக ஹாரியன் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
அஹ்னாஃப் ரிம 10,000 பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அக்டோபர் 3, 2019 அன்று காலை 10.20 முதல் 11.20 மணிக்குள் ஜொகூர், மூவார் பகுதியில் உள்ள ஒரு பள்ளி நூலகத்தில் வைத்து ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் பிரிவு 14(a): இக்குற்றத்திற்காக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படலாம்.
அதே சட்டத்தின் பிரிவு 16: பாதிக்கப்பட்டவருடன் நம்பிக்கையான உறவில் இருந்தபோது இக்குற்றத்தைச் செய்ததற்காக, கூடுதலாக ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் குறைந்தது இரண்டு பிரம்படிகள் வழங்கப்படலாம்.
வழக்கின் பின்னணி
மார்ச் 2024: அரசுத் தரப்பு முதற்கட்ட ஆதாரங்களை (prima facie) நிரூபித்ததைத் தொடர்ந்து, அஹ்னாஃப் தனது தரப்பு தற்காப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என்று செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு மார்ச்: அரசுத் தரப்பு சாட்சியத்தின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருந்ததைக் கண்டறிந்த நீதிமன்றம், அவரை விடுவித்து விடுதலை செய்தது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் டயானா நஜிஹா ஃபௌசி வாதிட்டார், அஹ்னாஃப் தரப்பில் வழக்கறிஞர் நூர் ஹஃபிசா அப்துல்லாஹ் முன்னிலையானார்.
























