பக்காத்தான் மாநாட்டு பதாதைகளில் ஏன் இந்தியர்கள் இல்லை?, டெரன்ஸ் நெட்டோ

சனிக்கிழமையன்று அலோர் ஸ்டாரில் நடைபெற்ற மூன்றாவது பக்காத்தான் ராக்யாட் மாநாடு மகத்தான வெற்றி என அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியின் ஆதரவாளர்கள் வருணித்துள்ளனர்.

என்றாலும் அங்கு சில விஷயங்கள் கண்களை உறுத்தின. அவை அற்பமானதாக தோன்றினாலும் சில தரப்புக்கள் பெரிதுபடுத்தக் கூடும். அந்த மாநாட்டுக்குச் செல்லும் பாதை நெடுகிலும் தொங்க விடப்பட்டிருந்த தோரணங்களில் காணப்பட்ட தலைவர்களில் ஒர் இந்திய மலேசிய தலைவர் கூட இல்லாதது தான் அந்த விஷயமாகும்.

அன்வார் இப்ராஹிம், நிக் அஜிஸ் நிக் மாட், அப்துல் ஹாடி அவாங், லிம் கிட் சியாங், லிம் குவான் எங் ஆகியோரது படங்கள் காணப்பட்டன. ஆனால் அந்தக் கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள கர்பால் சிங்-கோ அல்லது வேறு எந்த இந்தியத் தலைவருடைய படமோ அவற்றில் இல்லை.

“பக்காத்தான் பிரச்சார தோரணங்களில் மலேசிய இந்தியத் தலைவர் இல்லாதது, அம்னோ பிஎன் புறக்கணித்த அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியின் மகத்தான கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது,” என அந்தக் கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள மூன்று கட்சிகளில் ஒன்றில் உயர் பதவி வகிக்கும் தலைவர் ஒருவர் கூறினார். தமது கருத்துக்கள் உணர்ச்சியைத் தூண்டக் கூடும் என்பதால் தமது அடையாளத்தை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

“அது வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறு இல்லை என நான் நம்புகிறேன். என்றாலும் மலேசிய இந்தியர்கள் “கண்ணுக்குத் தெரியவில்லை”, பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தில்  மலேசிய இந்தியர்கள் பற்றி “சிந்தனைக்குள் வரமாலும்” இருக்கலாம் என்னும் அர்த்தத்தையும் அது தரக் கூடும்.

“அந்தத் தவறு அற்பமானதாகத் தோன்றலாம். ஆனால் பக்காத்தான் உச்சத் தலைவர் அண்மையில் விடுவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் அவருடைய தரப்பின் தலைமை வழக்குரைஞராக கூட்டணியின் உறுப்புக் கட்சிகளின் ஒன்றைச் சேர்ந்த மலேசிய இந்திய தலைவர் ஒருவர் இருந்துள்ள பக்காத்தான் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால் தோரணங்களில் எந்த இந்திய தலைவருடைய படமும் இல்லாதது அற்பமான விஷயம் எனச் சொல்வது உங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்,” என அவர் வாதாடினார்.

பக்காத்தான் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு விசாரணையில் டிஏபி தலைவர் கர்பால் சிங் அவரை பிரதிநிதித்தை அவர் அவ்வாறு சுட்டிக் காட்டினார்.

படங்களில் விடுபட்டு விட்டது ஆனால் அறிவாற்றல் ரீதியில் அல்ல

அந்த கெடா மாநிலத் தலைநகரில் உள்ள சுல்தான் அப்துல் ஹலிம் விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் கலந்து கொண்ட மலேசிய இந்தியர்கள், தோரணங்களில் இந்திய தலைவர்கள் விடுபட்டுள்ள விஷயம் கண்களை உறுத்தியிருக்க வேண்டும் என அவர் சொன்னார். தாங்கள் ஏமாற்றப்பட்ட உணர்வை அவர்கள் பெற்றனர்.

“அரசியல் என்பது எண்ணங்களையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்ட எதிர்த்தரப்பை சேர்ந்த அந்த மலேசிய இந்திய தலைவர், “பொருட்படுத்த வேண்டிய மக்கள் இல்லை- ஒரங்கட்டப்பட்ட மக்கள் என்ற தனது அவல நிலை குறித்து அதிகம் உணர்ச்சி வசப்படுகின்ற ஒரு சமூகம் அந்த ‘விடுபட்ட நிலையை’ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை,” என்றார்.

“உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும் தாங்கள் பயனுள்ளவர்கள், தேவையில்லாத போது ஒதுக்கி விடலாம் என்ற அந்த சமூக உணர்வுகளை சாந்தப்படுத்துவதற்கு அந்த ‘விடுபட்ட நிலை” உதவப் போவதில்லை,” என அவர் சொன்னார்.

அவ்வாறு விடுபட்ட நிலையால் ஏற்படக் கூடிய பாதகமான சூழ்நிலைகளை அவர் அதிகமாக எடுத்துரைத்த போதிலும் அந்த மாநாட்டுக்கு மறு நாள் கொண்டாடப்பட்ட தமிழர்களுடைய புத்தாண்டுக் கொண்டாட்டமான பொங்கல் திருநாளை ஒட்டி அனைத்துத் தமிழர்களுக்கும் “பொங்கல் வாழ்த்துக்களை” மறக்காமல் கூறிய டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கை பாராட்ட தவறவில்லை.

“அது லிம் குவான் எங்-கின் நல்ல உணர்வுகளைக் காட்டியது. அத்துடன் நல்ல ஆளுமை குறித்த கூட்டம் ஒன்றில் பேசுவதற்கு தம்மை மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி அழைத்ததை அன்வார் தமது உரையில் குறிப்பிட்டதும் ஆறுதலாக இருந்தது. விடுதலையானதும் அந்த நிகழ்வில் பங்கு கொள்வதற்காக அன்வார் இந்தியா மும்பாய்க்குச் சென்றார்.

“கூட்டத்தில் பங்கு கொண்ட மலேசிய இந்தியர்கள் பக்கத்தான் ராக்யாட் படங்களில் விடுபட்டிருந்தாலும் அறிவாற்றல் ரீதியில் அவர்கள் விலக்கப்படவில்லை என அவர்களிடம் கூறுவதற்கு அன்வாருடைய அந்தக் கருத்துக்கள் அமைந்திருந்ததாக அந்த மலேசிய இந்தியத் தலைவர் குறிப்பிட்டார்.