கட்சியில் ஆழமாக வேரூன்றியுள்ள படிநிலைகள், செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு வலைப்பின்னல்கள் மற்றும் தலைமை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உறுதியற்ற நிலை குறித்த கவலைகள் காரணமாகவே, இளம் தலைமைத்துவத்திற்கான மாற்றம் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது.
இளைஞர் தலைமையிலான மாற்றத்தை நோக்கி தெளிவான நகர்வு இருந்தபோதிலும், பல மாநிலங்கள் இன்னும் ’60-களில் இருக்கும் அனுபவம் வாய்ந்த நபர்களால்’ தான் வழிநடத்தப்படுகின்றன என்று சலே சையத் கெருவாக் கூறுகிறார்.
அரசியல் கட்சிகளின் கட்டமைப்பு, இளம் தலைவர்கள் கட்சியின் பொறுப்பை ஏற்பதையோ அல்லது அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குவதையோ தடுக்கிறது என்று சபாவின் முன்னாள் முதலமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சலே சையத் கெருவாக் கூறுகையில், தீபகற்ப மலேசியாவில் இளம் தலைமைத்துவத்தை நோக்கி ஒரு தெளிவான மாற்றம் உள்ளது – அமிருதீன் ஷாரி மற்றும் ஆன் ஹபீஸ் காசி ஆகியோரை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர் – இருப்பினும் பல மாநிலங்கள் இன்னும் “60 வயதுகளில் உள்ள அனுபவம் வாய்ந்த நபர்களால்” வழிநடத்தப்படுகின்றன என்றார்.
அமிருதீன் மற்றும் ஆன் ஹபீஸ் முறையே சிலாங்கூர் மற்றும் ஜொகூர் மாநிலங்களின் முதலமைச்சர்களாக உள்ளனர்.
ஒரு சில மாநிலங்கள் மட்டுமே இளம் தலைவர்களால் வழிநடத்தப்படுகின்றன என்பது, கட்சியில் வேரூன்றியிருக்கும் படிநிலைகள், ஆழமான ஆதரவு வலைப்பின்னல்கள் மற்றும் ஏற்படக்கூடிய நிலையற்ற தன்மை குறித்த கவலைகள் காரணமாக இளம் தலைவர்களுக்கான மாற்றம் படிப்படியாகவே நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது என்று சலே கூறினார்.
“முடிவு தெளிவாக உள்ளது. மலேசியாவில் இளம் தலைவர்களுக்குப் பற்றாக்குறை இல்லை, ஆனால் அமைப்பு இன்னும் அனுபவத்திற்கே முன்னுரிமை அளிக்கிறது,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மற்ற நாடுகளில் இன்னும் “பழைய தலைமுறையினரின்” (old guards) ஆதிக்கம் அரசியல் களத்தில் மேலோங்கியிருக்கும் நிலையில், மலேசியாவில் பழைய மற்றும் இளம் தலைவர்களுக்கிடையிலான ஒரு சமநிலை தென்படுவதாகவும், அது இன்னும் முழுமையான வளர்ச்சியை எட்டவில்லை என்றாலும் அதன் கூறுகள் தெரிவதாகவும் அவர் கூறினார்.
சீ ஜின்பிங், நரேந்திர மோடி, விளாடிமிர் புடின் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் போன்ற 70 வயதுகளில் இருக்கும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக சல்லே கூறினார்.
“மலேசியா ஒரு ‘பகுதி மாற்றக்’ கட்டத்தில் (partial transition) உள்ளது. மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் அது இன்னும் ஒரு மேலோங்கிய போக்காக மாறவில்லை.”
























