“நான் அன்வாரின் LGBT ஆதரவு நிலைப்பாட்டை எதிர்க்கிறேன்”; ஹசான் அலி

அன்வாரின் “எல்ஜிபிடி ஆதரவு” (பெண் ஒருபால் புணர்ச்சி, ஒரே பாலர் புணர்ச்சி, இருபால் உறுப்புகளைக் கொண்டவர் மற்றும் பால் மாற்றம் விரும்புகிறவர்) நிலைப்பாடு தாம் அவருடன் இணைந்து செயல்படுவதற்கான உறவுக்கு பெரும் தடங்கலாக இருப்பதாக பாஸ்சிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி கூறினார்.

“நான் ஏன் அவருடன் இணைந்து செயல்பட முடியாது என்பதற்கு இதுதான் காரணம். இதற்காகத்தான் மலேசியர்கள் அன்வாரை நிராகரிக்க வேண்டும்”, என்று அவர் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“எல்ஜிபிடி மலேசியாவில் சட்டப்பூர்வமாக்கப்படுவதா! அது நடக்கக் கூடாது. அது நடந்தால், சோதணை மிக்க காலத்தை நான் எதிர்நோக்குகிறேன்.”

இந்தியா, மும்பையில் அன்வார் பிபிசிக்கு இத்தலைப்பில் அளித்த ஒரு நேர்காணல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஹசான் இவ்வாறு கூறினார்.