புத்ராஜெயாவில் பல பகுதிகளில் திடீர் வெள்ளம்

புத்ராஜெயாவில் இன்று மதியம் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, ஆனால் பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை.

புகார்கள் வந்ததை அடுத்து, புத்ராஜெயா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் ஹசிக் ஹஸ்மி கூறுகையில், பிரிவு 7 மற்றும் 14 இல் உள்ள தீயணைப்பு நிலையங்கள் பல முக்கிய இடங்களைக் கண்காணிக்கவும் ரோந்து செல்லவும் குழுக்களை அனுப்பியதாகத் தெரிவித்தார்.

அலமண்டா மாலில் தண்ணீர் மட்டம் உயர்வது குறித்த புகார்களைத் தொடர்ந்து, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யவும், உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கவும் உடனடியாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள வடிகால் அமைப்புகள் மற்றும் நீர் நிலைகளும் சரிபார்க்கப்பட்டன. புத்ராஜெயா கட்டளை மையத்துடன் இணைந்து சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்று அவர் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

 

-fmt