பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா மாட்டைச் சுட்டது தொடர்பான விசாரணையில், காவல்துறை ஒரு துப்பாக்கியையும் ஒன்பது தோட்டாட்களையும் பறிமுதல் செய்துள்ளது.
கங்கார் காவல் துறைத் தலைவர் யுஷாரிஃபுதீன் யுசோப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெர்சத்து கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அவரிடம் முறையான துப்பாக்கி உரிமம் இருப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி சட்டப்பூர்வமாக அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா மாட்டை நோக்கி சுடத் தயாராகிறார்.
மலாய் மெயில் (Malay Mail) செய்தியின்படி, பொது இடத்தில் துப்பாக்கியைப் பயன்படுத்தியது தொடர்பாக, 1960 ஆம் ஆண்டு துப்பாக்கிகள் சட்டத்தின் பிரிவு 39-இன் கீழ் அபு பக்கரிடம் காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக யுஷாரிஃபுதீன் கூறினார்.
இந்தக் குற்றத்திற்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறைத்தண்டனை, ரிம 2,000-க்கு மிகாமல் அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.























