மலேசிய அரசியல் களம் மாறியுள்ளது: டோக் மாட் தகவல்

நாட்டின் அரசியல் சூழல் மாறியுள்ளதால், ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்காது என்று பாரிசான் நேசனல் துணைத் தலைவர் முகமது ஹசன் கூறுகிறார்.

டோக் மாட் என்றும் அழைக்கப்படும் முகமது, இந்த அரசியல் சூழல் மாற்றம், புத்ராஜயாவின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்காமல், மத்திய மற்றும் மாநில அளவில் வெவ்வேறு அரசியல் கட்டமைப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.

சபாவில் இது தனித்துவமானது, வாரிசான் அங்கு எதிர்க்கட்சியாக உள்ளது, ஆனால் மத்திய அளவில் ஒற்றுமை அரசாங்கத்துடன் உள்ளது.

எனவே மலேசியாவின் அரசியல் சூழல் மாறியுள்ளது. நாம் பழைய சிந்தனை முறையுடன் கட்டுண்டு கிடக்கக் கூடாது,” என்று அம்னோ துணைத் தலைவர் கூறினார்.

புத்ராஜயாவில் நெருங்கிய கூட்டாளிகளாக இருந்தபோதிலும், ஜொகூர் தேர்தலில் போட்டியிடும் 56 இடங்களுக்கும் பிஎன் மற்றும் பக்காத்தான் ஹரப்பான் கட்சிகள் மோதிக் கொள்கின்றன.

பெரிக்காத்தான் நேசனல் பதாகையின் கீழ் 11 இடங்களில் மட்டுமே போட்டியிடும் பாஸ் கட்சியுடன் பிஎன் ஒரு மறைமுக தேர்தல் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

 

 

-fmt